நொடை noḍai, பெ. (n.)
1. விலை; price.
“பிழிநொடை கொடுக்கும்” (பதிற்றுப்.30:12);.
“பறிப்புறத்து இட்ட பால் நொடை இடையன்” (நற். 142:4);.
“உமணர் தந்த உப்புநொடை நெல்லின்” (நற். 254:6);.
“புறவாயாற் புனல் பாயிற்…..நொடை நறவின்” (புறநா. 352:8);.
“நறவு நொடை தொலைச்சி” (பெரும்பா. 140.);.
2. விற்பனை; selling, sale.
“கண்ணொடையாட்டியர்”(சிலப்.5:24);.
3. விற்பனைப் பொருள், பல பண்டம்; merchandise.
“நொடை நவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்” (சிலப். 6:139);.
[நொடு → நொடை]