நொடு-த்தல் noḍuttal, 4 செகுன்றாவி. (v.t.)
1. விலை சொல்லி விற்றல்; to sell.
“மீனொடுத்து நெற்குவைஇ” (புறநா. 343);.
“பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாத்தயிர்மிதி” (அகநா.340:15);.
2. சொல்லுதல்; to tell.
[நுள் → நொள் → நொடு → நொடு-த்தல். (சு.வி. 45);]