நொடித்தான்மலை noḍittāṉmalai, பெ. (n.)
அழித்தல் தொழிலைச் செய்யும் சிவனின் பனிமலை (பிங்.);; Mount Kailāsa, as belonging to Śiva the Destroyer.
“நொடித் தான்மலை யுத்தமனே” (தேவா.1166,1);
[நொடி2 → நொடித்தான் + மலை. நொடி = அழித்தல். அழித்தல் தொழில் செய்யும் சிவன் இருக்கும் பனிமலை.]
இராவணன் இசையில் சிவன் மயங்கி இருந்தபோது பனி (கயிலாய); மலையை இராவணன் அடியோடு கையால் பெயர்த்ததாகவும், சிவன் கால்விரலால் மலையை அழுத்தி கைகளை நசுக்கியதாகவும் ஒரு தொன்மைக் கதையுண்டு.