நொடிசொல்(லு)-தல் noḍisolludal, 13 செ.கு.வி. (v.i.)
1. புதுச்செய்தி கூறுதல்; to speak of strange things.
‘பேய் நொடி சொன்னாற் போல’ (கலித். 89, உரை);.
2. விடுகதை சொல்லுதல் (வின்.);; to propose riddles, set conundrums.
3. பகடி செய்தல் (வின்.);; to crack jokes.
[நொடி5 + சொல்லு)-தல்]