நொச்சி

நொச்சி1 nocci, பெ. (n.)

   1. வெண்ணொச்சி; five-leaved chaste tree.

     “நொச்சி மாமலர் நிறத்தன” (சீவக.2163);.

   2. கருநொச்சி; three-leaved chaste tree.

   3. நொச்சித்திணை பார்க்க;see mocci-t-timai.

     “நொச்சிப்படலம்” (பு.வெ. 5);.

     “உட்கா தெதிரூன்றல் காஞ்சி யெயில் காத்தல் நொச்சி அதுவளைத்த லாகும் உழிஞை” (பழம்பாடல்);.

   4. எயில் காக்கும் வீரர் சூடிய நொச்சிப்பூவைப் புகழும் புறத்துறை (பு.வெ. 5:1, கொளு);; a minor theme eulogising the nocci garland worn by the warriors defending a fort.

   5. எயில் காவல்; defence of a fort.

     “அகத்தோன் வீழ்ந்த நொச்சி” (தொல். பொருள். 68);.

   6. மதில்; surrounding wall, fortress.

     “நொச்சிகாத் ததிகோர னோன்மையி னவணிருந்தான்” (தணிகைப்பு.சீபரி. 342);.

     “உறையூர் நொச்சி யொருபுடையொ துங்கி” (சிலப். 10:242);. 7.சிற்றூர் (சூடா.);;

 village, hamlet.

நொச்சிக்காடு.

   ம.நொச்சி;   க., து. நெக்கி;தெ. நொச்சிலி.

 நொச்சி2 nocci, பெ. (n.)

   மருத்துவக் குணங்கொண்ட ஒரு மருந்து மரம்; a kind of medicial plant.

மறுவ: சிந்துவாரம், ஐந்திலை நொச்சி.

நொச்சி ஒரு சிறிய மரம். இதன் இலைகள் 5 பிரிவாக நீண்ட காம்புகளுடன் இருக்கும். இதன் பூக்கள் சிறியவை, நீலநிற முடையவை. ஆண்டு முழுமையும் பூக்கும். இந்தியாவில் எங்கும் பரவியுள்ளது. நாட்டு மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. கட்டிகளைக் கரைக்க இதன் இலைகள் மிகவும் பயன்படுகின்றன. இதன் இலையைத் தண்ணில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவிபிடிக்க, நீர்க்கோவை நீங்கும். பல்வலி, இருமல், நீரேற்றம், இரைப்பு, காய்ச்சல்

முதலியவற்றிற்கு இதன் இலைகள் மருந்தாகின்றன இதன் வேர்ப்பட்டையும் மருத்துவக் குண கொண்டது. பூவும், இலைக்காம்பும் அரத்த போக்கைக் கட்டுப் படுத்தும். சாம்பசிவம் மருத்து அகரமுதலி கூறும் நொச்சி வகைகள்:

   1. ஆற்று நொச்சி

   2. ஐந்திலை நொச்சி

   3. கருநொச்சி

   4. காட்டுநொச்சி

   5. சிறுநொச்சி

   6. நீர்நொச்சி

   7. மயிலடி நொச்சி

   8. மலை நொச்சி

   9. மூவிலை நொச்சி

   10. வயல் நொச்சி

   11. வெண்ணொச்சி (சா.அக.);.

 நொச்சி3 nocci, பெ. (n.)

   1. சதகுப்பை (மருந்துப் பூடு);; dill, Anethum row.

   2. பதினெண் மூலிகைகளிலொன்று; one c the eighteen drugs (சா.அக.);.