நொச்சிமாலை noccimālai, பெ. (n.)
வீரர்கள் மதில் காத்தலைச் சிறப்பித்துக் கூறும் இலக்கிய வகை (யாழ்.அக.);; a poem describing the defence of a fort.
[நொச்சி + மாலை, நொச்சி மலர் மாலையைச் சூடிய வீரர்கள் எயிலைக் காத்தலைக் கூறும் இலக்கியவகை]
‘புறத்துன்றிய மாற்றார்க் கோடலின்றி நொச்சிப் பூமாலை சூடித்தன் மதில்காக்குந் திறங் கூறுமொரு இலக்கிய வகை’ (தொன்னூல்.283.உரை);