நொச்சிநியமம் nocciniyamam, பெ. (n.)
ஊர்ப்பெயர்; a village name.
நொச்சிநியமம், தெய்வநலம் பெற்ற ஊர்களில் ஒன்று. நொச்சிநியமங் கிழார் என்ற புலவர் வாழ்ந்த ஊர். நியமம் என்பது கோவிலைக் குறிக்கும். இப்போது இவ்வூர் நொச்சியம் என்று வழங்குகிறது. இப்பெயருடைய ஊர்கள் பல இருந்ததால், நொச்சிவேலி சூழ்ந்து பிறவற்றின் வேறுபடுதலின், இந்நியமம் நொச்சி நியமம்’ எனப்பட்டது. இவ்வூர் திருச்சிராப் பள்ளியிலிருந்து முசிறிக்குச் செல்லும் வழியில் உத்தமர் கோயிலுக்கு அண்மையில் உள்ளது.