நொசி

நொசி1 nosidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. நுண்மையாதல்; to be thin, slender, minute, as unable to bear a weight.

     ‘நொசி மருங்குதல்’ (தொல்,சொல். 368, இளம்பூ);.

   2. செயற்கு அருமையாதல்; to be difficult of observance, as a vow.

     “நோற்றுணல் வாழ்க்கை நொசிதவத்தீர்” (சிலப். 19:223);.

   3. வருந்துதல் (சங்.அக.);; to be in pain, to suffer.

   4. வளைதல்; to bend;

 to be slanting.

     “நொசிந்த நோக்கினன்” (சீவக. 2010);.

     [நுல் (நோதல்); → நுள் → நொள் → நொய் → (நொயி); → நொசி → நொசி-தல். நுல் = நுண்மை, இளமை, மென்மை, நுல் → நுள் → நுளு → நுசு → நுசி → நொசி → நொசி-தல் (வே.க.);]

 நொசி2 nosidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. நைதல்; to be frayed, worn out, as cloth.

     ‘நொசிந்த துகில்’ (தொல்.சொல். 330, உரை.);.

   2. குறைவுறுதல்.

 to be insufficient, deficient

     “நொசிவிலாத பூசனை” (விநாயகபு. 36.37);

     [நொய் → நொசு → நொசி → நொசி-தல் (வே.க.);]

 நொசி3 nosittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   வருந்துதல்; to distress, afflict.

     “நொசித்த வெம்முலை” (சீவக. 654);.

     [நுல் (நோதல்); → நுள் → நொள் → நொள்ளப்பு = வருத்தம். நொள் → நொய் → (நொயி); நொசி → நொசி-த்தல் (வே.க.);]

 நொசி4 nosi, பெ. (n.)

   நுண்மை (அக.நி.);; slenderness; fineness,

     [நுல் (நுண்மை,சிறுமை); → நுள் → நுளு → நுசு → நுசி → நொசி]