நொசிவு1 nosivu, பெ. (n.)
1. நுண்மை (தொல். சொல். உரி. 76);; slenderness; fineness.
2. நொய்ம்மை; lightness,
[நுல் = நுண்மை, மென்மை, இளமை,
நுல் → நுள் → நுளு → நுசு → நுசி → நொசி → நொசிவு (வே.க.);]
நொசிவு2 nosivu, பெ. (n.)
1. வருத்தம் (சூடா.);; suffering.
2. வளைந்த நிலை; state of being bent.
“நொசிவுடை வில்லின்” (பதிற்றுப்.45:3);.
[நுல்(நோதல்); → நுள் → நொள் → நொய் → (நொயி); – நொசி → நொசிவு (வே.க. நுல்4);]