நொங்கு1 noṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.)
விழுங்குதல்; to swallow.
“திங்களிரு நொங்க” (தேவா.1157, 3);.
ம. நொங்ஙு
[நுல் (துளை); → நுள் → நுழு → நுகு → நுங்கு → நொங்கு → நொங்கு-தல்]
நொங்கு2 noṅgudal, 5 செ.கு.வி. (v.i.)
மெலிதல்; to become weak and emaciated.
“அங்கமு நொங்குதே” (கணம் கிருஷ்ணையர்.1:2);.
[நுல் = மென்மை, சிறுமை, நுண்மை. நுல் → நுள் → நுளு → நுழு → நுகு → நுங்கு → நொங்கு → நொங்கு-தல் (வே.க.);]
நொங்கு3 noṅgu, பெ. (n.)
பனை நுங்கு; pulpy kernel of a tender palmyra fruit.
[நூங்கு → நொங்கு]