நை

நை1 nai,    நகரமெய்யும் ஐகார உயிரும் சேர்ந்த உயிர்மெய் எழுத்து; the compound of ‘n’ and ‘ai.’

     [ந் + ஐ – நை]

உயிர் மெய் எழுத்து வடிவம் தமிழிலிருந்து வடமொழி பெற்றது. ஆங்கிலம் அரைவளர்ச்சி நிலையிலேயே அசை (sylable); மொழியாக உள்ளது. அதனால்தான் தமிழ்க்குழந்தைகள் எழுத்துக்கூட்டலுக்கு இடர்ப்படுகிறார்கள். நைனா என்ற பெயரை Nai Na என்ற உயிர் மெய்க்கட்டமிட்டுக் கற்பித்தால் எளிதாய்ப் பயில்வர்.

 நை2 naidal,    1. நசுங்குதல்; to be crushed, bruised.

   2. தளர்தல்; to droop, languish, faint.

     “இடைநைவது கண்டு” (திருக்கோ.134);.

   3. வாடுதல் (வின்.);; to fade.

   4. மனம் வருந்துதல்; to be wounded in one’s feelings, to be distressed.

     “நைந்து சாமவர்க்கே” (திருநூற்.43);.

   5. இரங்குதல்; to feel pity.

     “நீ நல்காமையி னைவரச் சாஅய்” (புறநா.146);.

   6.சுருங்குதல்; to a dwindle, decrease.

     “நையாத வாயுளுஞ் செல்வமும்” (அருட்பா.5பொது. 2);.

நண்பன் குடும்பம் வறுமையில் மிகவும் நைந்துவிட்டது.

   7. தனக்கே உரிய மாத்திரை அளவில் குறைதல்; to be shortened in quantity, as a vowel.

     “வன்மைமே லுகர முறுவது நையும்” (வீரசோ. சந்தி.2);.

   8. நிலைகெடுதல்; to be injured, spoiled, over-ripe, as fruits;

 to be frayed worn out, as cloth.

மாம்பழம் பழுத்து நைந்து போச்சு.

   9. கெடுதல் (வின்.);; to waste away, perish.

   10. இற்றுப்போய் நூல்நூலாகப் பிரிதல்; to frayed; became threadbare.

அவர் உடல் நைந்த பழைய துணிபோல் கிடந்தது.

   11. துன்பம்:

 sadness.

   12. தன்வயப்படாமை (அவசமாதல்);; to forget oneself;

 to lose command of oneself.

     “அரிவை நைய” (சீவக.492);.

     [நொய் → நை. ஒ.நோ. பொய் (உட்டுளை); → பை.நை → நைதல்.(வே.க); இது தன்வினை வடிவம்.]

 நை3 naittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. நசுக்குதல்; to crush,

   2. அழித்தல்; to destroy.

     “வேலேகுறும்படைந்த வரண்கடந்தவர் நறுங்கள்ளி னாடுநைத்தலின்” (புறநா.97);.

   3. எரித்தல்; to burn.

     “ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது” (புறநா.240);.

     [நொய் → நை. இது பிறவினை வடிவம்]

 நை4 nai, இடை (int.)

   இகழ்ச்சிக்குறிப்பு (வின்.);; expr.signifying disdain or mockery.