நையாண்டிமேளம் naiyāṇṭimēḷam, பெ. (n.)
நாட்டுப்புறக் கலைகளான கரகம், காவடி
முதலியவற்றுக்கு இசைக்கப் படும் ஒருவகை இசைக் கருவி; an ensemble of musical instruments.
[நையாண்டி + மேளம்]
உறுமிமேள வகை. பேரிசை (பாண்டு); இசைக்காரர் போன்று ஒன்றே போல உடை உடுத்தி, மேளம் இசைப்பார்கள். பாடல்கள் கருநாடக இசையாக மட்டும் இல்லாமல் பலவகைப் பாடல்களையும் பாடுவார்கள் ஆடுவார்கள்.