நையாண்டிப்புலவர் naiyāṇṭippulavar, பெ. (n.)
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்; Tamil poet lived in 19th century.
இவர் இராமச்சந்திர கவிராயர் காலத்து வாழ்ந்தவர்;தொண்டை நாட்டினர். இவர் பள்ளிகொண்டான் என்னும் பரதவன்மீது
“வள்ளி கொண்டான் மயிலேறிக் கொண்டான் மதிபோலு
வெள்ளி கொண்டான் விடையேறிக் கொண்டான் விண்ண வர்க்க முதம் துள்ளி கொண்டான் சுப.சோபனஞ் சேர் பள்ளி கொண்டான் புகழேறிக் கொண்டா னென்று பார்க்கவென்றே”
என்று புகழ்பாடிப் பரிசு பெற்றவர்.