நையப்புடை-த்தல் naiyappuḍaittal, 4 செ.குன்றாவி. (v.t.)
1. உடம்பு தளர நன்றாக அடித்தல்; to belabour, thrash soundly.
திருடனை விரட்டிப்பிடித்து நையப்புடைத்துக் காவலில் வைத்தனர். ஆசிரியர் மாணவனைப் பிரம்பால் ஆறுமுறை நையப் புடைத்ததால் கை புடைத்துக் கொண்டது.
2. மொத்தையாக்குதல்; to beat into a pulpy mass, Mashing.
[நொய் → நை → நைய + புடை-த்தல்.]