நைமிசாரண்யம் naimicāraṇyam, பெ. (n.)
பனிமலைக்கு அருகில் உள்ள காடு; a forest near Himalaya mountains.
[நேமி → நைமி + சாரண்யம், நேமி =சக்கரம்]
இருடிகள் தாங்கள் தவமியற்றுதற்கு எதுவான நல்ல இடம் அருளுக என நான்முகனிடம் வேண்ட நான்முகன் ஆய்ந்து தருப்பையொன்றை எடுத்து நேமி சக்கரம்) போற்செய்து அதனை உருட்டி இதன்பின் செல்க, இது எவ்விடத்து நிற்குமோ அந்த இடமே தவமியற்றுதற்கு ஏதுவான இடம் எனச் சொல்ல. அதன்படியே நேமி நின்ற இடமாதலால் இதற்கு இப்பெயர் வந்தது என்பர்.