நைந்தோ

 நைந்தோ naindō, பெ. (n.)

   பள்ளர் இனமக்கள் தம் தலைவரை அழைக்குஞ் சொல் (இ.வ.);; an expression used by Pallars in villages in addressing masters.

     [நைந்தை = தலைவன், நைந்தை – நைதோ.]

தன்வாழ்வுக்கும், பின் தலைமுறைக்கும் பாடுபட்டவனைப் பாட்டன் என்று கூறுவதுபோல், உழைத்து நைந்து போன தந்தையை நைந்தை என அழைக்கும் மரபு இருந்தது.