நைடதம்

நைடதம்1 naiḍadam, பெ. (n.)

   வடமொழி நூலை (நைஷதம்); மூலமாகக் கொண்டு அதிவீரராமபாண்டியன் இயற்றிய தமிழ்க் காப்பியம்; a poem in Tamil by Adiviraramapândiyan, adapted from Sri Harsha’s Naisadha.

     [நிடதம் → நைடதம்.]

நைடதம் ஒரு தமிழ்க் காப்பியம். நிடதநாட்டு மன்னன் நளனுடைய கதையைக் கூறுவதால் நைடதம் எனப் பெயர் பெற்றது. நளனைப் பற்றியக் குறிப்பு, சிலப்பதிகாரத்தில் காணப்படுவதால் நளன்கதை தமிழ்நாட்டில் நீண்டநாட்களாக வழங்கி வந்தமை புலனாகும்.

நைடதம், வடமொழியில் கர்ச புலவர் இயற்றிய ‘நைசவு);தம் என்னும் வனப்பின் (காப்பியத்தின்); மொழி பெயர்ப்பு. வடமொழி நூலின் சுவை குன்றாமல் அதிவீரராம பாண்டியர் மொழி பெயர்த்துள்ளார் என்று இருமொழியிலும் இந்த நூல்களைக் கற்றோர் கூறுகின்றனர். இந்நூலின் முதலில் நிடத நாட்டின் வளமும் மாவிந்த நகரத்தின் சிறப்பும் நாட்டுப்படலம், நகரப்படலம் என்ற படலங்களிற் கூறப் பெற்றுப் பின்னர் அன்னத்தைக் கண்ணுற்ற படலம் முதலாக அரசாட்சிப் படலம் ஈறாக இருப்பதாறு படலங்களால்

   1173 செய்யுட்களில் நளன்கதை கூறப்பெறுகிறது. ‘நைடதம் புலவர்க்கவுடதம் என்று வழங்கும் சிறப்புரைக் கேற்ப, இந்நூல் புலவர்களின் அறிவுக்கு விருந்தாய்க் கற்பனைக் கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் மணிமேகலை முதலிய பழைய தமிழ் நூல்களின் கருத்துக்களும் சொற்றொடர்களும் விரவியுள்ளன.

இந்நூலின் தனிச்சிறப்பு, அன்னம் தமயந்தியிடம் நளனுக்காகத் துது சென்ற பகுதியைக் கூறுவது. இதை அன்னத்தைத் தூதுவிட்ட படலத்திற் காணலாம். தூதரின் இலக்கணத்திற்கு இலக்சியமாக அன்னம் விளங்கும்படி இந்நூலாசிரியர் அமைத்திருப்பது பாராட்டத் தக்கது. இந்நூலில் தமி ழ்ப் பண்பாட்டுக்கு மாறாகப் பெண்பாற் கைக்கிளை வந்துள்ளது.

     “அமிழ்தினை முனிந்து சாரல் அருவிதழ் மலயமின்ற தமிழினம் இனிய தீஞ்சொற் றையல் (சுயம்வரப்படலம்.140); எனக் கலைமகள் தமயந்தியை விளக்குங் கூற்றாக கூறியிருப்பதைக் கொண்டு இந்நூலாசிரியர் தமிழின் சுவையிலே ஊறியவ ரென்பதை அறியலாம்.

இந்நூல் காதலின் சிறப்பையும் சூதின் கெடுதியையும் நன்கு விளக்குகிறது. இந்நூலிலுள்ள செய்யுட்கள் மிக்க கடுமையும், மிக்க எளிமையுமி ன்றிச் செம்பாகமான நடையையுடையன.

இந்நூலை இயற்றியவர், பாண்டிய மன்னர்களில் ஒருவரான அதிவீரராம பாண்டியர். இவர் சிவனிடம் மிகுந்த அன்பு கொண்டவர். காசிக்காண்டம், திருக் கருவையந்தாதி முதலிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை என்னும் குழந்தை இலக்கியமும் படைத்துள்ளார்.

     “கற்கை நன்றே, கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே.”

என்பது அந்நூலில் வரும் பொன்வரி.

 நைடதம் naiḍadam, பெ.(n.)

   வடமொழி நைடதத்தை மூலமாகக் கொண்டு அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காப்பியம்; a poem in Tamil by {}, adopted from Sri harsha’s naisadha.

     [Skt. naisadha → த. நைடதம்.]