நைசல்1 naisal, பெ. (n.)
நோய் (யாழ்.அக.);; disease
[நைதல் → நைசல். த-ச திரிபு. தசை → சதை.]
நைசல்2 naisal, பெ. (n.)
காக்கை; crow.
[நசை → நைசல்.]
ஒரு காக்கைக்கு உணவு வைத்தால் பத்துக் காக்கைகளை அழைப்பதும் இறந்துவிட்டால் நூறு காக்கைகளை அழைப்பதும் ஆன நசை கொண்டது காக்கை இனம்.
“காக்கை காவாக் கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள” (குறள், 527);.