நேர்வு nērvu, பெ. (n.)
1. நிகழ்ச்சி (வின்.);; happening.
2. உடன்பாடு (யாழ்.அக.);; consent.
3. கொடுக்கை; giving.
“நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கித்தன் பூணாகம் நேர்வளவும் போக்காது” (தி.மா.16);.
4. வேண்டுகை (வின்.);; soliciting.
5. எதிர்கை; opposing.
“வஞ்ச னிராமனை நேர்வுறா”
6. பொருகை (வின்.);; fighting.
7. சரிந்து விழுகை (யாழ்.அக.);; dropping.
[நேர்1 → நேர்வு.]