நேர்வாளஎண்ணெய் nērvāḷaeṇīey, பெ. (n.)
நேர்வாளப்பருப்பினின்று வடிக்கும் எண்ணெய்; croton oil extracted from croton Seeds.
[நேர்வாளம் + எண்ணெய்.]
இவ்எண்ணெய் சிறுநீரை அதிகமாக உண்டாக்கப்பயன்படுகிறது. கழிச்சலை உண்டாக்கும். தோலைச்சிவப்பாக்கி எரிச்சலைத் தரும். இவ்எண்ணெய் குடற்சிக்கல், பாண்டு, தோல் நோய், கீல்மூட்டுவலி, நரம்பிழுப்பு நீர்க்கோவை, உடல்வலி இவைகளுக்கு மருந்தாகிறது. இவ்வெண்ணெய்யைத் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றுடன் கலந்தே பயன்படுத்த வேண்டும். தனியே தடவினால் எரிச்சல், கொப்புளம் உண்டாகும். (சா.அக.);.