நேர்மை1 nērmai, பெ. (n.)
1. செம்மை; straightness, directness.
“முக்கணிறை நேர்மையாய்க் கைக்கொண்டு போதிப்பதாச்சு” (தாயு.சு.க.வா.9);.
2. உண்மை (வின்.);; faith fulness, fidelity, honesty.
இந்தச் செயலில் அவன் நேர்மையாய் நடந்து கொண்டான்
3. முறைமை (நீதி);; impartiality; justness propriety.
4. அறம்; morality, virtue.
5. நுண்மை (ஐங்குறு.அரும்.);; fineness, thinness, minuteness.
6. திருத்தம் (வின்.);; accuracy, exactness,correctness.
7. சமம் (சீவக.835);; equality; uniformity.
8. இசைவு (யாழ். அக.);:
harmony, agreement.
9. நன்னிலை; good condition.
அந்தக் குடும்பம் நேர்மையோடு இருக்கிறது.
10. இணக்கம்; friendship, familiarity.
அவனுக்குமிவனுக்கும் நேர்மையில்லை.
[நேர்1 → நேர்மை, தன் நலத்துக்காக பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாத உண்மை நிலை; உண்மையைச் சொல்லி வெளிப்படையாக நடந்துகொள்ளும் தன்மை.]
நேர்மை2 nērmai, பெ. (n.)
நிகழ்வு, நிகழ்ச்சி (சம்பவம்);; occurence.
“இதுகண் டிந்நேர்மை புதிதென்றதிசயித்தான்” (மகாராசாதுறவு,111);.
[நேர் → நேர்வு → நேர்மை]