நேர்பண்ணு1 nērpaṇṇudal, 5 செ. குன்றாவி. (v.t.)
1. ஒழுங்குபடுத்துதல்; to make even.
வீட்டுப் பொருள்களை நேர்பண்ணி வைக்க வேண்டும்.
2. ஒன்றுபடுத்துதல்; to reconcile, unite.
[நேர்1 + பண்ணு-தல். பண்ணுதல் = செய்தல்.]
நேர்பண்ணு2 nērpaṇṇudal, 5 செ.கு.வி. (v.i.)
ஆணையிடுதல்; to take oath, swear.
[நேர் + பண்ணு-தல். பண்ணுதல் = செய்தல். ஆணையிடுதல்]