நேர்படு1 nērpaḍudal, 18 செ.குன்றாவி. (v.t.)
1. சந்தித்தல் (வின்.);; to meet to be in conjunction with, as planets.
2. நன்கு கற்றல், பயிலுதல்; to learn well.
“இவை பத்தும் நேர்பட்டார்” (திவ். திருவாய். 8.9:11);.
3. உடன் படல்; to agree, assent.
4. கிடைத்தல்; to be obtained.
“இல்லார்க்குக் கிழியீடு நேர்பட்டாலென” (திருவிளை. விருத்த.14);
[நேர் + படு-தல் படுதல் = தோன்றுதல், சந்தித்தல், தல்லீற்றுத்தொழிற்பெயர்.]
நேர்படு2 nērpaḍudal, 20 செ.கு.வி. (v.i.)
1. நிகழ்தல் (சம்பவித்தல்);; to occur.
2. ஏற்புடையதாதல்; to be appropriate, worthy.
3. வாய்த்தல்; to fall in one’s way.
“கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு” (திருவாச. 40.9);.
4. காணப்படுதல்; to appear.
“நேர்பட்ட நிரை மூவுலகுக்கும்” (திவ். திருவாய். 8.9:11);.
5. எதிர்ப்படுதல்; to come in front, meet.
“வஞ்சி நேர்பட்ட காலையில்” (தனிப்பா. 1, 146:46);.
6. நட்பாதல் (வின்.);; to be in harmony or on good terms.
7. ஒழுங்குபடுதல்; to be in order.
“ஒன்றொ டொன்று நேர்படாம லோடு நாய்கள்” (பெரியபு. கண்ணப். 69);.
[நேர் + படு-தல். படுதல் = நிகழ்தல், தோன்றுதல். இது தன் வினைவடிவம்.]