நேர்த்திக்கடன் nērttikkaḍaṉ, பெ. (n.)
1. கடவுளிடம் நேர்ந்து கொள்ளும் வேண்டுகோள்; vow made to a deity.
நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதாக வேண்டிக் கொண்டார்.
2. தெய்வத்திடம் வேண்டுகோளுக்காக வைத்த பொருள்; offering in fulfilment of a vow.
கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை முடிக்க வேண்டும். [நேர்த்தி + கடன். கடம் → கடன்.]
கடவுளுக்கு வேண்டிக் கொள்வதை நேர்ந்து கொள்ளுதல்” என்று சொல்வார்கள். அந்த வேண்டுகோளை முடிக்கும் வரை அதை ஒரு கடனாகவே நினைப்பார்கள். திடுதிப்பென்று. நோய்வாய் பட்டுச் சாகும் தறுவாயில் கூடத்தன் மக்களிடம்
“இன்ன கோயிலுக்கு இன்னது செய்வதாக நேர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த நேர்த்திக்கடனைச் செய்து விடுங்கள்” என்று கூறுவார்கள். நேர்த்திக்குமுன் ஒட்டாக, செய்ந்நேர்த்தி என்றுவரும் போது கலைத்திறனையும், சீர்செய்ந் நேர்த்தி (சீர்செனத்தி); என்பது மணமான மகளுக்குத் தந்தைதரும் வேலைப்பாடு மிக்க பொருள்களையும் குறிக்கும்.