நேர்சோழகம் nērcōḻkam, பெ. (n.)
நேராக வீசுநதென்றற்காற்று (வின்.);; wind direct from the South.
[நேர் + சோழகம்.சோழகம் = தென்றிசையில் இருந்து வீசுங்காற்று.]
தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாகிய சோழநாட்டிலிருந்து தொண்டை நாட்டுக்கு வீசும் காற்று தெற்குக் காற்றென்னும் தென்றல்.
திசை கூறாமல் நாடு கூறும் வழக்கும் உண்டு. ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதேகுறி-மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே. (முக்கூடற்.);