நேர்கொண்டகாத்து nērkoṇṭakāttu, பெ. (n.)
நேர்கிழக்குத் திசையிலிருந்து மேற்குத்திசை நோக்கி வீசுங்காற்று (மீனவ.);; a kind of wind blowing east to west.
[நேர் + கொண்டல் + காத்து. கொண்டல் = கிழக்கு. காற்று → காத்து]
குணக்கு என்னும் கிழக்குத்திசையில் இருந்து வீசும் காற்று கொண்டல் எனப்படும். ஒ.நோ.தென்திசைக்காற்று தென்றல்.