நேர்கடன்1 nērkaḍaṉ, பெ. (n.)
நேர்த்திக் கடன் (யாழ். அக.); பார்க்க;see nerti-kkadan.
[நேர் + கடன் – நேர்கடன் = இறை வனுக்கு நேர்ந்து கொள்ளும் வேண்டு தலை வினைத்தொகை வடிவம்]
நேர்கடன்2 nērkaḍaṉ, பெ. (n.)
நேரில் வட்டிகேட்டு வாங்கும் கடன்; a kind of debt.
[நேர் + கடன்.]
சிலர்சிறுவட்டிக்குவாங்கிப் பெருவட்டிக்குக் கொடுப்பர். ஆதலால் அவ்வாறான சுற்றுக்கடன் அன்றி வட்டி குறைத்து வாங்கும் நேர்கடனை இது குறிக்கும். வேற்றுமைத் தொகை வடிவம்.