நேரில் nēril, வி.எ (adv.)
1. மற்றொருவரின் மூலமாகவோ கடிதத்தின் மூலமாகவோ இல்லாமல் குறிப்பிட்டவரிடம் அல்லது குறிப்பிட்ட இடத்தில் தானே; in person.
தலைவரை நேரில் பார்த்துத் தன் குறைகளைக் கூறினான். இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோர்அலுவலகத்துக்கு நேரில் வரவும்
2. பார்த்தல், கேட்டல், குறித்து வருகையில் தன் கண்களால் அல்லது காதால்; தானே சான்றாக; with one’s own eyes or ears; personally.
அண்ணாவை நான் நேரில் பார்க்கவில்லை. அவர் நடித்ததை நான் நேரில் பார்த்தேன்.
[நேர் → நேரில்.]