நேரியன்1 nēriyaṉ, பெ. (n.)
நேரி வெற்புக்குரிய (நேரி குன்றுக்குரிய); சோழமன்னம் (திவா.);; the Chölä king, as lord of the Néri hill.
[நேரி → நேரியன்.]
நேரியன்2 nēriyaṉ, பெ. (n.)
1. நுண்ணறி வுள்ளவன் (வின்.);; a man of subtle intellect.
2. அணுவுக்கு அணுவாயிருப்பவன்; the most subtle Being.
“நேரியனுமாய்ப் பரியனுமாய்” (சி.சி.8:28);.
[நேர்1 → நேரியன்]