நேரிசைச்சிந்தியல்வெண்பா nērisaissindiyalveṇpā, பெ. (n.)
இரண்டாம் அடியில் தனிச்சொல்பெற்று வரும் சிந்தியல்வெண்பா வகை; a species of Šindiyal-veņbā with a detached foot at the end of the second line.
“நேரிசை இன்னிசைபோல நடந்தடிமூன்றின் வந்தால் நேரிசை இன்னிசை சிந்திய லாகும்” (யா.கா.28);.
[நேரிசை + சிந்தியல்வெண்பா. சிந்தியல் வெண்பா. = இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று மூன்றடியாய் இருவி கற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் அமையும் வெண்பா வகை.]
எ.டு.
“நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
கற்றும்வண் டார்ப்பப்புடைத்தாளே பொற்றேரான்
மாலைநல் வாயில் மகள்” (யா.கா.28.மேற்);
“அறிந்தானை ஏத்தி யறிவாங் கறிந்து
சிறந்தார்க்குச் செல்வ னுரைப்ப-சிறந்தார்
சிறந்தமை யாராய்ந்து கொண்டு.” (யா.கா.28.மேற்.);