நேராக nērāka, கு.வி.எ. (adv.)
1. பிறர் மூலமாகவன்றித் தானே; directly in person.
தானே நேராக ஈடுபட்டான்.
2. தெளிவாக (பிரத்தியட்சமாக);; before ones eyes, in sight.
3. உண்மையாய்; honestly, straight forwardly.
4. முழுமையும்; completely.
‘அகவாயிலுள்ளது நேராகப் போனவாறே’ (ஈடு, 4.4:10);.
5. புறப்பட்ட விடத்திலிருந்து வேறு எங்கும் செல்லாமல்; straight from.
நேராகப் பள்ளிக்குச் செல்லுதல் வேண்டும். பள்ளிக்கூடம் விட்டதும் நேராக வீட்டுக்கு வா.
5.வளையாமல், திரும்பாமல் காட்டிய வழியிலேயே; straight a head.
வலப்புறம் சென்று நேராகப்போனால் ஊர்வரும். இந்த வழியே நேராகச் சென்றால் குளத்தை யடையலாம்.
[நேர் → நேராக]