நேரம்1 nēram, பெ. (n.)
1. வினை நேருங்காலப் பகுதி; Time.
“நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை மீட்டிடம் பெற்று’ (பெருங். உஞ்சைக்.57:74);.
நேரங் காலம் பார்த்து வேலையைத்துவங்க வேண்டும்.
2. தக்க சமையம்;வேளை (தருணம்);,பொழுது (திருக்கோ.290, துறைவிளக்கம்);,
opportunity, season.
“ஆண்டொருபத்துடனாறு நிரம்பிய தந் நேரம்” (சேது பு. துத் தம் 14.);.
கொடுப்பினைக்கும் நேரம் வாய்க்க வேண்டும்.
3. இருசாமங்கொண்ட அரைநாள்; பகலிற் பாதியாகிய காலவளவு (திவா.);; a measure of the day = 2 Šāmam = 1/2 pagal = about six hours.
4. மணி; hour.
குறித்த நேரத்தில் வந்து விடுவேன்.
5. இத்தனை மணியெனக் கணக்கிடும் காலவளவு; length of time.
ஒருவர்குறைந்தது எட்டு மணிநேரமாவது துங்கவேண்டும்.
ம.நேரம்;இ. தேர்.
குட. நெர து. நேர்டே
[நேர் → நேரம்]
நேரம்2 nēram, பெ. (n.)
1. குற்றம்; guilt, fault
2. தண்டம் (அபராதம்);; fine.
தெநேரமு.
[நேர்வு → நேர் + அம்]