நேரசை nērasai, பெ. (n.)
குறிலும் நெடிலும் தனித்தேனும் ஒற்றடுத்தேனும் வரும் அசைவகை (யாப்.வி. 6);; a metrical syllable consisting of a short or long letter, singly or followed by a consonant.
“நெடில்குறிறனியே நின்றுமொற்றடுத்தும் நடைபெறுநேரசை நால்வகையானே” (யாப்.வி.6);.
[நேர் + அசை.]
எ.டு: ஆழி, வெள், வேல்,
ஆ-ழி- வெள் – வேல்
“குறிலே நெடிலே….
நெறியே வரினும் நிரைந்தொற் றடுப் பினும் நேர்….” (யா.கா.5);
“குறிலே நெடிலே….. ஒற்றொடு
வருதலொடு மெய்ப்பட நாடி நேரும்” (தொல்,பொருள்.செய்.3);
நேரசை, நிரையசை பிரிப்பு தமிழில் யாப்போசைக்கு அடிப்படை தனி நேர்க்கு நாள் என்றும், நேர்நேர்க்குத் தேமா என்றும், நேர்நேர், நேர்-க்கு தேமாங்காய் என்றும், நேர்நேர்நேர்நேர் நான்கிற்குத் தேமாந்தண்யூ என்றும் வாய்பாடு கூறுவது வழக்கம். நேர்க்கு இணையாக வடமொழியில் லகு என்றும் நிரைக்குக் குருவென்றும் வழங்குவர்.