நேரங்கெட்டநேரம் nēraṅgeṭṭanēram, பெ. (n.)
1. தகுதியற்ற காலம்; unseasonable hour, as for visiting or eating.
நேரங்கெட்ட நேரத்தில் சொந்தக்காரர்கள் வந்து விட்டனர்.
2. பேய்கள் உலவுவதாகக் கருதப்படும் காலமல்லாக்காலம்; unpropitious time, as midday or dusk, when demons are supposed to be abroad.
நேரங் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வராமல் நேரத்தோடு வந்துவிடு.
[நேரம் + கெட்ட நேரம்]
உறவினர் வந்தால் உணவு ஏற்பாட்டுத் துயர் உண்டாகும். தனிமையும், இருண்மையும் பேய் அச்சம் உண்டாகும்.