நேரங்கெட்டநேரத்தில் nēraṅgeṭṭanērattil, வி.எ. (adv.)
நேரம் கழித்து; at an ungodly hour.
நேரங்கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வராதே. நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடாதே.
[நேரம் + கெட்டநேரத்தில்]
நேரம் கெட்ட நேரத்தில் வீட்டிற்கு வருபவர் கதவைத்தட்டுவதனால், உழைத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்போர்க்குத் துக்கங் கலையும், தொல்லைவரும். சூடு ஆறிய உணவு சுவை குன்றியிருக்கும் என்பதனால் இத்தொடர்
அமைந்ததென்க.