நேயர் nēyar, பெ. (n.)
1. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்புபவர்; radio listeners; television viewer.
நேயர்விருப்பம் கேட்டால் மனத்துக்கு ஆறுதல் கிடைக்கும்.
“வணக்கம் நேயர்களே” என்று கூறிவிட்டு நிகழ்ச்சியைத் தொடங்கினார் அறிவிப்பாளர்.
2. தாளிகை (பத்திரிகை); களை விரும் பிப்படிப்பவர்; reader of magazine.
[நேயம்1 → நேயர்]