நேமி1 nēmi, பெ. (n.)
1. வட்டம் (திவா.);; circle.
2. தேருருளை; wheel of a chariot.
“குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக இளம்பிறையன்ன விளங்குசுடர் நேமி” (குறுந். 189);.
“ஆரஞ் சூழ்ந்த வாயில் வாய் நேமி யொடு” (சிறுபாண். 253);.
“வன்பால் முரம்பின் நேமி அதிர” (நற்.394:5);.
3. சக்கர ஆய்தம்; Discuss.
“திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்” (திவ். இயற். திருவிருத். 9);.
“நனந்தலையுலகம் வளைஇ நேமியொடு” (முல்லை.1);.
4. செங்கோலாழி (ஆணைச் சக்கரம்);; wheel of sovereignty.
“ஏம முரசம் இழுமென முழங்க நேமி உய்த்த நேஎ நெஞ்சின்” (புறநா. 3);.
5. சக்கரவாள மலைத்தொடர்; mythical range of mountains.
“நேமிமுதல் தொல்லிசையமையும் புலவராய், புரைத்த புனைநெடுங்குன்றம்” (பரிபா. 15:3,4);.
“நேர்கொ ணெடுவரை நேமியிற்றொடுத்த” (மலைபாடு. 238);.
6. சக்கரம் போன்ற நிலவுலகம் (திவா.);; earth.
7. உலகைச் சூழ்ந்தகடல் (திவா.);; sea, ocean.
“நேமியிற் செல்லு நெய்க்கணிறாஅல்” (மலைபடு. 525.);
8. விரற்செறி (பிங்.);; ring.
9. சக்கரவாகப் பறவை; cakra bird.
“பொலஞ்சூட்டு நேமி வாண்முகஞ் துமிப்ப” (குறுந். 227);.
10. சக்கரப் படையுடைய திருமால்; Tirumai, as wielding the discus.
“நேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ” (கம்பரா. பிணிவிட் 70);.
11. சமணத் தலைவர் இருபத்து நால்வருள் ஒருவர்; an Arhat, one of 24 Tirttañkarar.
“நிகரி னேமிதனீணகா” (சீவக. 912);.
நேமி2 nēmi, பெ. (n.)
தேர்செய்யப் பயன்படும் மரவகை. இதிலிருந்து சிவப்புத் துவர்ப்புப் பிசின் எடுக்கப்படும்; chariot tree gives astringent red gum. (சா.அக.);.
நேமி2 nēmi, பெ.(n.)
1. வட்டம் (திவா.);; circle.
2. தேருருளை; wheel of a chariot.
“தேர்முடுக…. விளங்கு சுடர்நேமி” (குறுந்.189);.
3. சக்கராயுதம்; discus.
“திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்” (திவ். இயற். திருவிருத்.9);.
4. ஆளுமைச்சக்கரம்; wheel of sovereignty.
“நேமியுய்த்த நேள நெஞ்சின்” (புறநா.3);.
5. சக்கரவாளம் பார்க்க;see sakkara-{}.
“நேமி முதல்… நெடுங்குன்றம்” (பரிபா.15,4);.
6. பூமி (திவா.);; earth.
7. மோதிரம் (பிங்.);; ring.
8. சக்கரவாகம், 1 பார்க்க;see {}.
“பொலஞ்சூட்டு நேமி வாண்முகந் துமிப்ப” (குறுந்.227);.
9. சக்கரப்படையையுடைய திருமால்; Visnu, as wielding the discus.
“நேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ” (கம்பரா. பிணிவீட். 70);.
10. தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர்; an Arhat, one of 24 {}.
“நிகரி னேமிதன்ணகர்” (சீவக. 912);.
நேமி3 nēmi, பெ.(n.)
1. கடல்; ocean.
2. உணவுக் கட்டுப்பாடு பத்தியம்; diet.
3. நிலவுக்கு; earth.
4. மூங்கில்; bamboo.
5. சக்கரவாகப்புள்; the ruddy goose.
6. எலிச்செவிப்பூடு; rat’s ear plant.
7. சந்தனம்; sandal wood.
8. வேங்கை; East lndian kino.
9. பழமுண்ணிப் பாலை; edible palay (சா.அக.);.
நேமி4 nēmi, பெ.(n.)
தேர்மரம், தேர்கட்ட பயன்படுவதால் இப்பெயர், இதினின்று சிவப்பு துவர்ப்புப் பிசின் எடுக்கப்படும். இதன் பட்டை குடல் நோய் தீர்க்கும். மரத்திலிருந்து ஒரு வகை அயச்சத்து எடுக்கப்படும்; chariot tree – Dalbergia oojeinesis so called from its usefulness for making chariots. Gives astringent red gum, bark is useful in bowel complaints. A crystalline substance like magnesia is sometimes found in the wood. (சா.அக.);.