நேமிநாதம் என்னும் சின்னூலில் எழுத்ததிகாரம் இயல்பகுப் பின்றிஉள்ளது. இதன்கண் எழுத்துக்களின் முதல்வைப்பு, துணைவைப்பு, பிறப்பு,முதல்நிலை, இறுதிநிலை, வடமொழி யாக்கம், வடமொழி எதிர்மறை முடிபு,பொதுப்புணர்ச்சி, உடம்படுமெய், உயிரீற்றுச் சந்திமுடிவு, ஒற்றிற்றுச்சந்தி முடிவு, குற்றியலுகரச் சந்திமுடிவு, எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி,பகுபத அமைப்பு முதலியவற்றைக் காணலாம். இஃது இருபத்து நான்கு வெண்பாச்சூத்திரங்களால் ஆகியது.