திரிபுவன தேவன் என்ற பெயரிய முதற்குலோத்துங்கன் (கி.பி. 1070 -1118) காலத்தில் தொண்டைநாட்டுப் பொன்விளைந்த களத்தூர் எனப்பட்ட களந்தைஎன்னும் ஊரில் தோன்றிய குணவீரபண்டிதர் என்னும் சமணச் சான்றவர், தென்மயிலா புரி நீல்நிறக்கடவுள் நேமிநாதர் பெயரால், தொல்காப்பியத்தைமுதனூலாகக் கொண்டு எழுத்து – சொல் – என்ற இரண்டு அதிகாரங்களைப்பாயிரத்தொடு 97 வெண்பாக்க ளால் நேமி நாதம் என்னும் இலக்கணநூலாகஇயற்றினார். இந்நூல் சின்னூல் என்ற பெயராலும் வழங்கப்படுகிறது. இதன்எழுத்ததிகாரத்தே இயல்பகுப்பு இல்லை; சொல்லதிகாரம் தொல்காப்பியச்சொல்லதிகாரம் போல ஒன்பது இயல் களைக் கொண்டது. இந்நூற்கு ‘வயிரமேகவிருத்தி’ என்ற அழகிய சுருக்கமான உரை உள்ளது.