நேந்துநிரவிப்போ-தல் nēnduniravippōtal, 8 செ. கு. வி. (v.i.)
சற்று ஏறக்குறைய இருந்தாலும் சரிக் கட்டிக் கொண்டு போதல்; to rectify, correct, redress, to adjust, indemnify, reimburse.
[நே(ர்);ந்து + நிரவி + போ-தல்]
மனமொத்துக் கூட இருப்பதைக் குறைவாக இருப்பதில் இட்டு சரி செய்துபோவது நேந்து நிரவிப் போதலாகும். நேந்து போதல் = குறைதல், மெலிதல். நிரவுதல் = இருப்பதிலிருந்து குறைவதற்குப் போடுதல்.