நேடு-தல் nēṭudal, 5.செ. குன்றாவி. (v.t.)
1. தேடுதல்; to seek, look out for.
“கொண்டவனிருப்ப மற்றோர்… வேலினானை நேடிய நெடுங்கணாளும்” (சீவக. 252);.
“நெறிமணனேடினர் செல்லச் சொல் லேற்று” (பரிபா 20:43);.
“சினகரமொருவிப் போகுவான் வழிகனேடினேன்” (பிரமோத்.4:11);.
2. பொருளீட்டுதல் (நாஞ்.);; to earn.
3. விரும்புதல் (யாழ்.அக.);; to desire, wish.
4. எண்ணுதல்; to consider, think, lay to heart.
“சூரபன் மனிளவறன் முடிவுநேடி” (கந்தபு. அசுரேந். 65);.
5. இலக்காகக் கொள்ளுதல் (வின்.);; to aim at pursue.
ம.நேடுக; க.நிட்டிசு;குட.நேட்.
[நோண்டு → நேண்டு → நேடு → நேடு-தல், நோண்டுதல் = தோண்டித் தேடுதல் (வே. க);. ஒ. நோ. தோண்டு → தேண்டு → தேடு → தேடு-தல்]