நெளிவெடு1 neḷiveḍuttal, 5.செ.குன்றாவி. (v.t.)
வளைவு நீக்குதல் (உ.வ.);; to mend anything bent or warped, to correct an irregularity.
இந்த ஏனத்தை நெளிவெடுத்துக் கொடு.
[நெளிவு + எடு-த்தல்]
நெளிவெடு2 neḷiveḍuttal, 4செகுவி. (v.i.)
நெளி கணையாழி (மோதிரம்); முதலியவற்றில் வளைவை உண்டாக்குதல் (வின்.);; to make the flexure as to a neli ring.
[நெளிவு + எடு-த்தல். எடுத்தல் = உண்டாக்குதல்]