நெளிவு

நெளிவு1 neḷivu, பெ. (n.)

   1. வளைகை; crawling, writhing.

வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டுமானால் கொஞ்சமாவது நெளிவு சுளிவு தேவை.

   2. துன்பம்; suffering.

     “நெளிவுண்டாக் கருதாதே” (தேவா.29,3);.

வாணிகத்தால் அவனுக்கு நெளிவில்லை.

   3. இணங்குகை; bending, yielding.

   4. கமுக்கம் (மர்மம்);; ins and outs, real nature.

அவன் வாழ்வில் ஏதோ நெளிவு ஒன்று இருக்கிறது.

   5. வளைந்த விரலணி வகை (நெல்லை.);; a kind of ring, as having a peculiar curve.

என்தங்கை மகளுக்கு நெளி (கணயாழி); மோதிரம் ஒன்று வாங்கிக் கொடுத்தேன்.

   6. உள் மடங்கிப்பின் நேராகும் இடத்தில் உள்ள வளைவு; bend, curve.

சாலை வளைவோ நெளிவோ இல்லாமல் நேராக இருந்தது.

   7. கூந்தலின் சுருளான நிலை; curl.

அவனுக்கு கூந்தல் சுருள் சுருளாக இருந்தது. அவனுக்கு கருகருவென்ற நெளிவே இல்லாத முடி.

   8. ஏனம் முதலியவற்றில் அடிபட்டதால் ஏற்படும் வடிவக்குறைவு; dent is a vessel.

ஏனத்தின் நெளிவைத் தட்டிச் சரியாக்கு.

     [நெளிதல் = வளைதல், வருந்துதல் நெளி1 → நெளிவு]

 நெளிவு2 neḷivu, பெ. (n.)

   செருக்கு, இறுமாப்பு; pride.

இப்போதெல்லாம் அவன் நெளிவோடு நடந்து கொள்கின்றான்.

     [நெளித்தல் = செருக்குறுதல் நெளி3 → நெளிவு]