நெளிவுசுளிவு neḷivusuḷivu, பெ. (n.)
1. கமுக்கம் (மர்மம்); (உ.வ.);; ins and outs, real nature.
நெளிவு சுளிவோடு பேசவேண்டும்.
2. ஏற்றத்தாழ்வு (இ.வ.);; excess and deficiency.
3. வாங்குதல், விற்றல் போன்றவற்றில் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நிலை; ins and outs of a business, learning or knowing the ropes.
ஒரே ஆண்டில் வரவு செலவில் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொண்டான்.
[நெளிவு = வளைவு, வளைகை. நெளிவு + சுளிவு. சுளிவு = சினம். நிலைமைக் கேற்ப வளைந்து கொடுத்தும், சினப்பட்டும் செயலை முடித்துக் கொள்வது.]