நெளியலன் neḷiyalaṉ, பெ. (n.)
கூனன் (யாழ்ப்.);; humpback.
[நெளியல் = வளைவு, வளைந்தது. நெளி அல் + அன் – நெளியலன்.]
அல்-இடைநிலையாக எதிர்மறைப் பொருளிலும் சாரியையாக உடன்பாட்டுப் பொருளிலும் வரும். ஈண்டு உடன்பாட்டுப் பொருளில் வந்துள்ளது.
“பயனில் சொல் பாராட்டுவானை மகனெனல் மக்கட் பதடி எனல்” (திருக்குறள்); அல்முதலது எதிர்மறை, பின்னது உடன்பாடு.