நெளிப்பு neḷippu, பெ. (n.)
1. செருக்கு (கருவம்); முதலியவற்றால் செய்யும் உடலசைவு
affected gestures of the body, as of a vain person.
2. இறுமாப்பு (யாழ்.அக.);; Pride.
அவனுக்கு என்னதான் இருந்தாலும், இந்த நெளிப்பு ஆகாது.
3. ஏளனம் (பரிகாசம்); (யாழ்.அக.);; Ridicule.
4. துன்பம் (அருட்பா,4, பிள்ளைப்பெரு,25);:
trouble, affliction.
[நெளி3 + பு]