நெல் செல் கொல் சொல் : முடியுமாறு

இந்நான்கு பெயர்களும் வன்கணம் வருவழிப் பொதுவிதியான் (இயல்பாதலும்லகரம் றகரமாகத் திரிதலும் ஆகிய) உறழ்ச்சி பெறாது, அல்வழிக்கண்ணும்வேற்றுமைப் புணர்ச்சி போல லகரம் றகரமாகத் திரிந்து முடியும்.வருமாறு : நெற்கடிது செற்கடிது கொற்கடிது சொற் கடிது, சிறிது,தீது, பெரிது.(செல் – மேகம்; கொல் – கொல்லுத்தொழில்; அன்றிக் கொல்லனுமாம்).(நன். 232 சங்கர.)