நெல்வெண்ணெய் nelveṇīey, பெ. (n.)
கடலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஊர்; a village in Cuddalore district.
இவ்வூர் இன்று நெய்வெண்ணை என அழைக்கப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்றவூர்.
“நிச்சலும் மடியவர் தொழுதெழு நெல்வெணெய்”;
“நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய கரைவிரி கோவணத்தீரே”,
“நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய்”;
“நீடிளம் பொழிலணி நெல்வெணெய்”;
நெல், வெண்ணெய் என்பதைக் கொண்டு இவ்வூரின் பெயர் அமைந்திருக்கலாம்.