நெய்வெணை இன்று சுட்டப்படும் தலம். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் அமைகிறது. சம்பந்தர் தேவாரம் இவ்வூருக்கு அமைகிறது. இவரது பாடல்கள் இவ்வூரின் வளத்தைக் காட்டுமாறு அமைகின் றன.
நிச்சலும் மடியவர் தொழுதெழு நெல்வெணெய் (354-2)
நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
கரைவிரி கோவணத்தீரே (354-3)
நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் (354-4)
நீடிளம் பொழிலணி நெல்வெணெய் (354-5)
என்ற பாடலடிகளைக் காணும்போது, நெல், வெண்ணெய் என்ற சொற்கள், ஊரின் மிக்க வளத்தைக் காட்டும் நிலையில் அமைவதை எண்ணத் தோன்றுகிறது. எனவே அந்த அடிப் படையில் இப்பெயர் பொருத்தமுறுமா எனக் காணலாம்.