நெல்வாயில் அரத்துறை

திருவரத்துறை எனச் சுட்டப்படும் இடம் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ளது. தேவார மூவரும் இத்தலத்து இறை யைப் புகழ்கின்றனர். உவர்ப்பெயர் நெல்வாயில். கோயில் அரத்துறை. பிற நெல்வாயில் தலத்தினின்றும் வேறுபடுத்திக் காட்ட அரத்துறையை இணைத்திருக்கலாம். நெல்வாயில் நெல்லின் செழிப்பு காட்ட எழுந்ததே என்பது ஈண்டும் விளக்கமாகிறது. நிவாநதியின் வடகரையில் உள்ள தலம் ஆகையால் அதன் கரையில் கோயில் அமைய, துறை என்பது பொருத்தமாக அமைகிறது.
நல்வாய் அகிலும் கதிர் மாமணியும்
கலந்துந்தி வரும் நிவவின் கரைமேல்
நெல்வாயிலரத்துறை நீடுறையும்
நிலவெண் மதிசூடிய நின்மலனே
என்ற பாடல் அரத்துறையினைப்பற்றிய எண்ணம் தரவல்லது.
நிவா என்பது வடவெள்ளாற்றைக் குறிக்கும்.